ஏமாற்றம்…

Posted on July 10th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

0 comments.

எட்டா கனிகள்… என் கனவுகள்….

Posted on May 27th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

dreams

இப்போதெல்லாம்…
கனவுகள்  ஒளிபரப்பும் நேரம்
என் கண்கள் 
விழித்திருப்பதில்லை….
அந்த காலத்து
நினைவுகள் மட்டும் உண்டு…
சில கனவுகள்
 எட்டா கனியாகி விட்டதும் உண்டு….
அதனால் தான்…
இன்று கனவுகளில்
இழந்த வாழ்க்கையை
வாழ்ந்து 
கொண்டிருக்கிறேன்…
அதனால்தானோ 
என்னவோ….
இப்போதெல்லாம்
கனவுகள்  ஒளிபரப்பும் நேரம்
என் கண்கள் 
விழித்திருப்பதில்லை….

1 comment.

நான்

Posted on May 20th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

காலத்தின் கையில் அடிபட்டு
தலை சிதைந்த 
தலை எழுத்து நான்…
என் காலங்கள் கண்ணோடு
கண்ணீறாக கரைந்து கொண்டிருக்கிறது…
ஒரு துளியில் உறைந்து
அமிழ்ந்து…
தொலைந்து போன வாழ்க்கையில்….
இறுதி வரை நான் 
தேடி கொண்டிருப்பது
எனையும்…
என் முகத்தையும்…

1 comment.

ஒரு மயக்கத்தில் எழுதியது!

Posted on May 16th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

she

மெல்லிய மயிலிறகு வருடுகிறது
அதன் வண்ணம் ஒழுகி 
என் மனம் நனைகிறது…
தூய புறாவின் 
முனகல்
காதில் ஒலித்து கொண்டே
இருக்கிறது…
நீ கிளியா?
பின்பு  ஏன்?
உன் ஒவ்வொரு வார்த்தையும்
என் காதில் 
அசரீரி போல ஒலித்து
கொண்டே இருக்கிறது!

0 comments.

இது தான் காதல்.!!!!!!

Posted on May 16th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

love

காதலுக்கு கண்னில்லை…
பேதம் இல்லை….
மொழி இல்லை…
காதல்… கடவுள்…
இதோ வாழ்கிறார்கள் இப்புகைப்படத்தில்
இருவரும்….
காதலிப்போரே!
இது தான் காதல்…!!!

1 comment.

விழைதல்

Posted on May 15th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

me

ஆற்றங்கரை மணலில்
வீடு கட்டி…
நீர் கண்ணாடி உடைத்து
குளித்து…
மண் பூசி அலங்கரித்து…
விழுது பிடித்து
ஊஞ்சலாடி….
அணிலோடு 
போட்டி போட்டு
கொய்யா திருடி…
என்னென்னமோ செய்திருக்கிறேன்…
தாயே என்னை மீண்டும் 
ஒரு குழந்தையாக
பிரசவி…
உன் கிராமத்தில்….
வாழ வேண்டும் நான்…

1 comment.

நினைவுகள் இயற்றிய கவிதை

Posted on May 15th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

எஞ்சிய நாட்களில்
மிஞ்சிய மிச்சம்
காதல் எச்சம்
என் கவிதைகள் மட்டும்…
மற்றும் உன் நினைவுகள்…!

0 comments.

முரண்பாடே வருக!?

Posted on May 14th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

ennaval

முரண்பாடுகளே…
கொஞ்சம் பத்திரமாக
இருங்கள்….
என்னவள் வருகிறாள்…
உங்களை வீழ்த்த…?

1 comment.

அவர்கள்…?

Posted on May 14th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

storks

பறந்த போது தான் தெரிந்தது
அவர்கள் கருஞ்சிறகு 
கொண்ட வெண் கொக்குகள் என்று!?

0 comments.

தேடல்!?

Posted on May 14th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

SEA

தமிழ் எனும் ஆழ் கடலில்
வார்த்தை முத்தெடுக்க
முயன்று கொண்டிருக்கிறேன்
என் எண்ண நூலில்
கவி மாலை கோர்ப்பதற்கு….   

0 comments.