You are looking at posts that were written on May 15th, 2008.
Posted on May 15th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

ஆற்றங்கரை மணலில்
வீடு கட்டி…
நீர் கண்ணாடி உடைத்து
குளித்து…
மண் பூசி அலங்கரித்து…
விழுது பிடித்து
ஊஞ்சலாடி….
அணிலோடு
போட்டி போட்டு
கொய்யா திருடி…
என்னென்னமோ செய்திருக்கிறேன்…
தாயே என்னை மீண்டும்
ஒரு குழந்தையாக
பிரசவி…
உன் கிராமத்தில்….
வாழ வேண்டும் நான்…
Posted on May 15th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

எஞ்சிய நாட்களில்
மிஞ்சிய மிச்சம்
காதல் எச்சம்
என் கவிதைகள் மட்டும்…
மற்றும் உன் நினைவுகள்…!