
ஆற்றங்கரை மணலில்
வீடு கட்டி…
நீர் கண்ணாடி உடைத்து
குளித்து…
மண் பூசி அலங்கரித்து…
விழுது பிடித்து
ஊஞ்சலாடி….
அணிலோடு
போட்டி போட்டு
கொய்யா திருடி…
என்னென்னமோ செய்திருக்கிறேன்…
தாயே என்னை மீண்டும்
ஒரு குழந்தையாக
பிரசவி…
உன் கிராமத்தில்….
வாழ வேண்டும் நான்…